கன்னியாகுமரியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி பெண் அளித்த மனுவிற்காக நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் !!

கன்னியாகுமரியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி பெண் அளித்த மனுவிற்காக  நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் !!
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய பெண்
கன்னியாகுமரியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி பெண் அளித்த மனுவிற்காக நடவடிக்கை எடுக்க போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், அம்மாண்டிவிளையை சேர்ந்த புஷ்பலதா என்ற மாற்றுத்திறனாளி பெண் அளித்த கோரிக்கை மனுவில்; - இரு குழந்தைகளுடன் நான் வசித்து வருகிறேன். இந்நிலையில் எனது வீட்டருகே வசிக்கும் மகேந்திரகொடிலன் என்பவர் கடந்த 18ந் தேதி இரவு எனது வீட்டு ஜன்னல்கள், குடிநீர் இணைப்பு, மின்விளக்கு ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். உடல்நலம் இன்றி இருக்கும் எனக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க தாமதமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும். கடந்த ஆண்டும் இதே போன்று வீட்டை சேதப்படுத்தியதற்காக மணவாளகுறிச்சி காவல் நிலையத்திலும், நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்திலும் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் அதே போன்று வீடு சேதப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தனது கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அவரிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து புஷ்பலதா அங்கிருந்து சென்றார். இதனால் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story