கோளிவாக்கம் பகுதியில் குழாய் இல்லாததால் வீணாகும் குடிநீர்
வீணாகும் தண்ணீர்
கோளிவாக்கம் பகுதியில் குழாய் இல்லாததால் குடிநீர் வீணாகி வருகிறது.
காஞ்சிபுரம் ஒன்றியம், கோளிவாக்கம் பிரதான சாலையில், அப்பகுதியில் வசிப்போருக்காக, கூடுதல் குடிநீர் ஆதாரத்திற்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில், குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
தொட்டியில் தண்ணீர்பிடிப்பதற்காக இரு குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், தண்ணீர் பிடிக்க பயன்படும் குழாய் உடைந்துள்ளதால், குச்சியை வைத்து அடைத்துள்ளனர். இதில், குழாய் முழுமையாக மூடாததால் குடிநீர் கசிந்து வீணாகி வருகிறது. எனவே, குடிநீர் தொட்டிக்கு புதிதாக குழாய் பொருத்த வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.
Next Story