குமரபாளையத்தில் கண்டைனர் லாரி கவிழ்ந்து விசைத்தறி பட்டறை சுவர் சேதம்

குமரபாளையத்தில் கண்டைனர் லாரி கவிழ்ந்து விசைத்தறி பட்டறை சுவர் சேதம் அடைந்தது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கத்தேரி பிரிவு முதல் எஸ்.எஸ்.எம். கல்லூரி வரையில் மேம்பால பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. சேலம் கோவை புறவழிச்சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. குறுகிய சாலையில் பெரிய அளவிலான வாகனங்கள் தடுமாறியபடி செல்கின்றன.

இதற்கு காரணம் சாலை ஆக்கிரமிப்பு எனவும் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு இருந்தால்,சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நேற்றுமுன்தினம் இரவு 07:00 மணியளவில், சேலம், கோவை புறவழிச்சாலை வளையக்காரனூர் பகுதியில் மேம்பால பணியால், வாகனங்கள் சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது,

எதிர்பாரதவிதமாக, கண்டெய்னர் லாரி ஒன்று நிலை தடுமாறி, அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அருகில் இருந்த பாலசுப்பிரமணி என்பவரின் விசைத்தறி பட்டறை சுவர் மீது சாய்ந்து, சுவர் இடிந்து விழுந்து சேதமானது. இது குறித்து தகவலறிந்த தேவூர் போலீசார் நேரில் வந்து, விசாரணை மேற்கொண்டனர். இதில் இந்த லாரி, மகுடஞ்சாவடி அருகே தலையூர் பகுதியிலிருந்து, கோவைக்கு சென்றது தெரியவந்தது.

இதனை ஓட்டி வந்த அதே பகுதியை சேர்ந்த ஓட்டுனர் குப்பண்ணன், 32, பலத்த காயமடைந்தார். இது குறித்து தேவூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story