குமரியில் நேற்று 3- வது நாளாக யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை

X
வேட்பு மனு தாக்கல்
சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு மூன்றாவது நாள் நேற்று ஒருவரை கூட வேட்பு மனு செய்யவில்லை.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல், விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. அன்று முதல் நாடாளுமன்ற தொகுதிக்கு நாகர்கோவிலுள்ள கலெக்டர் அலுவலகத்திலும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கு குழித்துறையில் உள்ள விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும். வேட்பு மனுக்கள் பெறப்பட்டு, மனு தாக்கல்கள் நடைபெறுகிறது. நாடாளுமன்ற தொகுதியில் இதுவரை சுயேட்சையாக இரண்டு பேர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று யாரும் வேட்பு மர தாக்கல் செய்யவில்லை. இதுவரை அரசியல் கட்சியினர் உட்பட 30 பேர் வேட்பு மனுக்கள் வாங்கி சென்றுள்ளனர். சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு மூன்றாவது நாள் நேற்று ஒருவரை கூட வேட்பு மனு செய்யவில்லை. இந்த தொகுதியில் போட்டியிட இதுவரை 11 மனுக்கள் வாங்கி சென்றனர். சில கட்சிகளுக்கு இன்னும் முறையான வேட்பாளர்கள் அறிவிக்காத நிலையில், திங்கள்கிழமை யான 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி முடிய உள்ள நாட்களில் அதாவது திங்கள் செவ்வாய் புதன்கிழமைகளில் வேட்பு மனு தாக்கல் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
