குருங்குளம் சர்க்கரை ஆலையில் டிச.4ல் அரவை தொடக்கம்..!
தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளத்தில் உள்ள அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் வரும் 4ம் தேதி முதல் நிகழாண்டுக்கான கரும்பு அரவைப் பருவம் தொடங்க உள்ளது என மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த குறுவை பருவத்தில் 1 லட்சத்து 93 ஆயிரத்தி 860 ஏக்கர் நடவு செய்யப்பட்டு, 1 லட்சத்தி 38 ஆயிரத்து 561 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
போதிய நீர் வரத்து இல்லாத காரணத்தால் 33 சதவீதத்துக்கும் மேல் பாதிக்கப்பட்ட 138 ஏக்கர் குறுவை பயிருக்கு நிவாரணம் வழங்க அதன் அறிக்கையை பேரிடர் மேலாண்மை பிரிவுக்கு அனுப்பட்டுள்ளது. அதே போல் சம்பா, தாளடி பருவத்தில் கடந்த 22 ம் தேதி வரை 2 லட்சத்து 56 ஆயிரத்து 534 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 170 ஏக்கர் பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
பயிர் காப்பீடு செய்தவர்களில் நடவு செய்ய உள்ளோர், விதை செய்ய உள்ளோர் போன்று அடங்கல் சான்றுகள் பெற்று பதிந்தவர்கள், நடவு அல்லது விதைப்பு செய்த பின் திருந்திய அடங்கல் சான்று பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், விதைப்பு செய்ய இயலாமை, விதைப்பு பொய்த்துப் போதல் போன்ற காரணங்களினால் 75 சதவீதம் சாகுபடி பரப்பு குறைந்துள்ள கிராமங்கள் என தஞ்சாவூர், பூதலூர், திருவையாறு ஆகிய வட்டாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அந்த கிராமங்களை ஆய்வு செய்ய மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் "இல்லம் தேடி கிசான் அட்டை" முனைப்பு இயக்கம் கடந்த அக்.1 ம் தேதி முதல் கிராமங்கள் தோறும் நடத்தப்பட்டதில், 7,500 விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. திருஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின் படி வழங்க வேண்டிய நிலுவைத் தொகை தற்போது 75 சதவீதமாக உயர்த்தப்பட்டு கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
2023-2024 ம் ஆண்டுக்கு 740 கோடி நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டில், தஞ்சாவூர், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் கடந்த ஏப்.1 ஆம் தேதி முதல் நவ.24 ஆம் தேதி வரை ரூ.334.88 கோடி வழங்கப்பட்டுள்ளது. கு
ருங்குளத்தில் உள்ள அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் நிகழாண்டு டிச.4 ஆம்தேதி அரவைப் பருவம் தொடங்கவுள்ளது. கடந்தாண்டு கரும்பு அரவை செய்த விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2821 வீதம் கரும்பு கிரயமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அ
தே போல் தமிழக அரசு அறிவித்த சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.195 வீதம் 1863 விவசாயிகளுக்கு ரூ.3 கோடியே 94 லட்சத்தி 47 ஆயிரம் விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்படவுள்ளது" என்றார்.