மெதுகும்மல் ஊராட்சியில் பாலம் கட்டும் பணி: எம்எல்ஏ துவக்கி வைப்பு

மெதுகும்மல் ஊராட்சியில்  பாலம் கட்டும் பணி: எம்எல்ஏ துவக்கி வைப்பு
பாலம் வேலை எம் எல் ஏ துவக்கி வைத்தார்
மெதுகும்மல் ஊராட்சியில் பாலம் கட்டும் பணியை எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

குமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மெதுகும்மல் ஊராட்சி ஆலங்காவு - சீனி விளை சாலையில் உள்ள பாலம் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட கனமழையால் உடைப்பு ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

பல கிலோமீட்டர் தூரம் சுற்றி பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனை அடுத்து பாலத்தை சீரமைக்க, அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனை அடுத்து புதிய பாலம் அமைக்கும் பணியை ராஜேஷ் குமார் எம் எல் ஏ நேற்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் விஜயகுமார், மெதுகுமல் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வராஜ் மற்றும் கவுன்சிலர்கள், பொதுமக்கள் ஏராளம் பேர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story