காதல் திருமணம் செய்த வாலிபர் திடீர் மாயம் !

காதல் திருமணம் செய்த வாலிபர் திடீர் மாயம் !
மாயம்
நாகர்கோவிலில் மனைவியிடம் தொழில் தொடங்கப் போவதாக கூறி பணத்தை பெற்று கொண்டு மாயமான கணவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்தவர் பாண்டி (33) இவர் மஞ்சுளா (28) என்பவரை கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு சிலரிடம் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி பணம் வாங்கிவிட்டு பாண்டி திடீரென மாயமானார். சில மாதங்கள் கழித்து பின்னர் வீட்டிற்கு வந்தார். மனைவியிடம் தொழில் தொடங்கப் போவதாக கூறியதை அடுத்து மஞ்சுளா மகளிர் சுய உதவி குழுவில் இருந்து ரூபாய் 5 லட்சம் கடன் வாங்கி கொடுத்துள்ளார். பெங்களூர் சென்று பழைய கார் வாங்கி விற்கும் தொழில் செய்வதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் இதுவரை வீடு திரும்பவில்லை. அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் மஞ்சுளா அவரை பல்வேறு இடங்களை தேடினார். அவர் குறித்து தகவல் கிடைக்காததால், வடசேரி போலிசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story