ஒரே நாளில் ரூ. 2.25 லட்சம் அபராதம்
சோதனை
திண்டுக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் நகர், சாணார்பட்டி, கோபால்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தேநீர்க் கடைகள், மளிகைக் கடைகள் உள்ளிட்ட இடங்களில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் புதன்கிழமை சோதனை நடத்தினர்.
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைகள், நெகிழிப் பை பயன்படுத்திய கடைகள் என மொத்தம் 10 கடைகளுக்கு சீல் வைத்த அலுவலர்கள், அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.2.25 லட்சம் அபராதம் விதித்தனர்.
Next Story