ஆவின் பாலில் புழு மக்கள் பரபரப்பு !

ஆவின் பாலில் புழு மக்கள் பரபரப்பு !

ஆவின் பாலில் புழு 

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தேனீர் கடைக்கு வாங்கிய ஆவின் பாலில் புழுக்கள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தேனீர் கடைக்கு வாங்கிய ஆவின் பாலில் புழுக்கள் மதந்த தகவலின் அடிப்படையில் சம்பவயிடத்திற்கு வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். நீலகிரி மாவட்டம் ஊட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள தேனீர் கடையில் இன்று காலை கடையின் உரிமையாளர் உழவர் சந்தை அருகே உள்ள ஒரு கடையிலிருந்து ஆவின் பால் பாக்கெட்டை வாங்கி உள்ளார்.கடைக்கு வந்து பாலை சூடு செய்வதற்காக பாத்திரத்தில் பாக்கெட்டை பிரித்து கொட்டியுள்ளார். அப்பொழுது பால் முழுவதும் வெள்ளை புழுக்கள் மிகுந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு தகவல் அளித்தார். தகவலின் பெயரில் அங்கு வந்த உணவு பாதுகாப்பு அதிகாரி பாக்கெட் பாலில் உள்ள புழுக்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அந்த பாக்கெட்டை சோதனை செய்த பொழுது பாக்கெட், இன்றைய தேதியில் கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. மேலும் இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி கூறுகையில் ,"நகரில் உள்ள அனைத்து கடைகளிலும் இந்த பேட்ஜ் எண் கொண்ட ஆவின் பால் பாக்கெட் களை ஆய்வு செய்ய உள்ளதாகவும், அந்த வரிசை எண் கொண்ட ஆவின் பால் பாக்கெட் களை விற்பனை செய்ய வேண்டாம் என ஆவின் நிறுவனத்திற்கு தெரிவிக்கப்படுவதாகவும், தொடர்ந்து ஆய்வு அறிக்கை வழங்கப்படும்," என்றார். நீலகிரி மாவட்டத்தில் மிக அதிகமான மக்கள் ஆவின் பாலை பயன்படுத்தி வரும் நிலையில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட வரிசை எண் கொண்ட ஆவின் பால் பாக்கெட் களை விற்பனை செய்ய வேண்டாம் என ஆவின் நிறுவனத்திற்கு தெரிவிக்கப்படுவதாக என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சிவராஜ் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story