பாபநாசம் தொகுதியில் தபால் ஓட்டும் போடும் பணி 5ஆம் தேதி தொடக்கம்
பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற நோக்கில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85க்கும் மேற்பட்ட முதியோருகளுக்கு தபால் வழியாக ஓட்டளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது பாபநாசம் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் முருககுமார் தேர்தல் துணை வட்டாட்சியர் விவேகானந்தன் ஆகியோர் கலந்து கொண்டு தபால் ஓட்டு போடும் பணியினை எவ்வாறு மேற்கொள்வது என விளக்கி பேசினார்கள்.
பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தலில் 225 மாற்றுத்திறனாளிகளும் 85 வயதுக்கு மேற்பட்ட 118 வாக்காளர்களும் ஆக மொத்தம் 343 பேர் உள்ளனர் இவர்களின் வீடுகளுக்கே சென்று ஓட்டு சாவடி நிலை அலுவலர்கள் தபால் ஓட்டை பெறுகின்றனர் 14 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நடமாடும் குழுவிலும் ஒரு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் ஒரு உதவி வாக்குச்சாவடி அலுவலர் ஒரு நுண் பார்வையாளர் ஒரு காவலர் மற்றும் ஒரு புகைப்படக் கலைஞர் ஆகியோர் இருப்பர் வாக்குச்சாவடிக்கு வர இயலாத வாக்காளர்கள் விவரங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டு எந்த தேதியில் எந்த நேரத்தில் அவர்களின் வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்ற தகவலை வாக்குச்சாவடி ,
நிலை அலுவலர்களும் மூலமாக வாக்காளர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு வேட்பாளர்களின் முகவர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மூலம் வாக்காளர் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்ற விளக்கத்தினை அளித்து அதன் பேரில் அவரிடம் ரகசிய வாக்குப்பதிவு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் தெரிவித்தனர்.
பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை 6ஆம் தேதி சனிக்கிழமை 8ஆம் தேதி திங்கட்கிழமை ஆகிய 3 நாட்களும் தபால் வாக்குகள் வீடு தேடி சென்று வாங்க உள்ளனர். மேற்படி வாக்களிக்கும் விவரங்கள் அனைத்தும் புகைப்படக்காரர்கள் மூலம் வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் மண்டல அலுவலர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்