வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் ஆட்சியர் நேரில் ஆய்வு

வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் ஆட்சியர் நேரில் ஆய்வு
விஜயகரிசல்குளத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு செய்தார்
வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் முன்றாம் கட்ட அகழாய்வு பணிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில், 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்க உள்ள நிலையில், அதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் கடந்த 16.03.2022 அன்று முதற்கட்டமாகவும், 06.04.2023 அன்று இரண்டாம் கட்டமாகவும், அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. அப்போது நுண் கற்காலம் முதல் வரலாற்று தொடக்க காலம் வரையிலான இரும்பு கற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பானை ஓடுகள் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டன. அதோடு,

நுண்கற்கால கருவிகள் மற்றும் பல வகையான பாசிமணிகள், சூடு மண்ணாலான காதணிகள், பொம்மைகள், தக்களி, சங்க கால வளையல்கள், மோதிரங்கள், சில்லு வட்டுகள், இரும்பு உருக்கு கழிவுகள், சங்கு வளையல்கள், தங்க அணிகலன்கள், விலை மதிப்புள்ள கல் மணிகள் என சுமார் 7,914 பழங்கால பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. அதனை தொடர்ந்து, 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில்,

அதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவரஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story