சேலத்தில் த.மா.கா. சார்பில் தொழிலாளர் தினம் கொண்டாட்டம்

சேலத்தில் த.மா.கா. சார்பில் தொழிலாளர் தினம் கொண்டாட்டம்

தொழிலாளர் தினம்

சேலத்தில் த.மா.கா. சார்பில் தொழிலாளர் தினம் கொண்டாட்டம். புத்தாடைகள் வழங்கப்பட்டது.
சேலம் மாநகர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அம்மாப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நேற்று தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சுமை தூக்கும் தொழிலாளர்கள், சுகாதார பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் ஆகியோருக்கு மாநகர் மாவட்ட தலைவர் கே.எம்.உலகநம்பி, மாநில இணைச் செயலாளர் சின்னதுரை ஆகியோர் புத்தாடைகள், இனிப்புகளை வழங்கி தொழிலாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். நிகழ்ச்சியில், சிறுபான்மை பிரிவு தலைவர் அப்சல் கான், மீனவரணி தலைவர் பழனிவேல், பொதுச்செயலாளர்கள் மாரியப்பன், சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story