சிவகங்கையில் இடைநின்ற குழந்தைகள் பள்ளியில் சேர்ப்பு பணி தீவிரம்

சிவகங்கையில் இடைநின்ற குழந்தைகள் பள்ளியில் சேர்ப்பு பணி தீவிரம்

மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் 

சிவகங்கை மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்படும் குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு குழு (District Task Force) மூலம் கடை நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் குழந்தைத் தொழிலாளர்களை கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க மாதம் இருமுறை கூட்டாய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகள் பிற்காலத்தில் குழந்தைத் தொழிலாளர்களாக உருவாகும் நிகழ்வினை தடுக்கும் பொருட்டு, மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு காவல் துறை ஆள்கடத்தல் பிரிவு கல்வித்துறை B.R.T., மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர், மாவட்ட குழந்தைகள் நலக்குழு ஆகியோர் அடங்கிய குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு குழுவின் (District Task Force) மூலம் 13.10.2023 அன்று சிவகங்கை மற்றும் மானாமதுரை, 18.10.2023 அன்று இளையான்குடி புதூர் மற்றும் 20.10.2023 அன்று திருப்பாச்சேத்தி அருகில் டி.வேலாங்குளம் பகுதிகளில் கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், இளையான்குடி புதூரைச் சேர்ந்த 4 பள்ளி செல்லா / இடைநின்ற மாணவ/மாணவிகள், மானாமதுரை மூங்கில் ஊரணியைச் சேர்ந்த 1 மாணவி ஆகியோரை அவர்கள் வீட்டிற்கே சென்று அவர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்கி, பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், வேலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி செல்லா / இடைநின்ற 1 மாணவியை மீட்டு, மாவட்ட குழந்தைகள் நல குழுவில் ஆஜர்படுத்தப்பட்டு அரசு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுபோன்று குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு குழுவின் மூலம் மாவட்டத்திலுள்ள பள்ளிச்செல்லா / இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து, பள்ளிகளில் சேர்க்கப்பட்டு, சிறந்த முறையில் கல்வி கற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story