தாளவாடியில் விவசாயிகள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்

தாளவாடியில் விவசாயிகள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்

போராட்டம்

தேர்தலை புறக்கணிப்பதாக கூறி விவசாயிகள் வீடுகளில் கருப்பு கொடி கட்டியுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது . வாழை, கரும்பு, முட்டைகோஸ், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இங்குள்ள வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் யானைகள் விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருவது வழக்கமாக உள்ளது. மேலும் மனித விலங்கு மோதல்களை தடுக்கவும் வனப்பகுதியை சுற்றி வனவிலங்குகள் வெளியேறாத வகையில் அகழிகள் அமைக்கவும், பழைய ரயில் தண்டவாளங்கள் மூலம் வேலிகள் அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது . இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளதால், வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி தேர்தலை புறக்கணிப்பதாக கூறி விவசாயிகள் வீடுகளில் கருப்பு கொடி கட்டியுள்ளனர்.

Tags

Next Story