பெண் மாயமான வழக்கில் வாலிபரை கடத்திய 4 பேர் கைது

பெண் மாயமான வழக்கில்  வாலிபரை கடத்திய 4 பேர் கைது

காவல்நிலையம் 

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில் பெண் மாயமான வழக்கில் வாலிபரை கடத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆலங்குடி அருகே கீழப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சவுமியா (வயது 22). சம்பவத்தன்று சமயபுரம் பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்ற சவுமியா, பின்னர் வீடுதிரும்பவில்லை. இதுகுறித்து சவுமியாவின் தந்தை கருப்பையா சமயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார் .

இந்நிலையில், கும்மங்குளத்தை சேர்ந்த பவுல்ராஜ் மகன் வில்லியம் (21) என்பவர் சவுமியாவை கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் வில்லியம்மை கடத்தி சவுமியாவின் உறவினர்கள் தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன், 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து அவர் களை வலைவீசி தேடி வந்தனர்.

இதையடுத்து செம்பட்டி விடுதி கீழப்பட்டியை சேர்ந்தராமராஜ் மகன் விக்னேஷ் (28), தங்கவேல் மகன் சேகர் (52), சிங்காரம் மகன் செந்தில்குமார் (52), குலப்பெண்பட்டி கிராமத்தை சேர்ந்த கருப்பையா (57) ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து ஆலங்குடி போலீசில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து போலீசார் அவர்களை ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய்பாரதி முன்பு ஆஜர்ப டுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story