கொலை சம்பவத்தில் 4 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது

வேளாங்கண்ணியில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக நான்கு மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 4 மணி நேரத்தில் கைது சிறப்புடன் செயல்பட்ட வேளாங்கண்ணி காவல் நிலைய அதிகாரிகளை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்கள்.

நாகப்பட்டினம் மாவட்டம் செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் வயது 55. இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இவர் தற்போது வேளாங்கண்ணி அருகே பரவையில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கருவேலங்கடை மகா காளியம்மன் கோவில் முன்பாக கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள். வேளாங்கண்ணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுனர்கள் வரவழைக்கப்பட்டு கொலை நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும் இந்த கொலை சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டதில் ரவிச்சந்திரனின் நண்பரண தெற்கு பொய்கைநல்லூர் வடக்கு தெருவைச் சேரந்த நடவண்டி மோகன் என்கின்ற மகேஸ்வரனும் கொலை செய்யப்பட்ட ரவிச்சந்திரனும் பகலில் ஒன்றாக சுற்றித் திரிந்தது தெரியவந்தது. மேலும் ரவிச்சந்திரன் தனது வீட்டிற்கும் மகேஸ்வரனை அழைத்துச் சென்றது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த சிசிடிவி காட்சியின் அடிப்படையில் மகேஸ்வரனை நாகை மாவட்ட காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்க்கொண்டனர்,

மேலும் இவ் விசாரணையில் தாங்கள் ஒன்றாக சேர்ந்து மது குடித்துக் கொண்டிருக்கும் போது வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனையில் அதிகமான நிலையில் மற்றொரு கூட்டாளியோடு சேர்ந்து கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கொலை செய்த மகேஸ்வரனையும் கொலைக்கு உடந்தையாக இருந்த கருவேலங்கடை பகுதியைச் சேர்ந்த ஞானபிராகசம் ஆகிய இருவரையும் கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். கொலை நடந்த நான்கு மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த வேளாங்கண்ணி காவல் அதிகாரிகளை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் பாராட்டினார்கள்.

Tags

Next Story