திருப்பூரில் வருவாய் துறை அலுவலர்கள் புறக்கணிப்பு போராட்டம்

திருப்பூர் அரசுத்துறை அலுவலகங்களில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலகங்களில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திய வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் வருவாய்த்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் , சான்றிதழ் வழியங்கும் பணிக்கான புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை ஏற்படுத்திட வேண்டும் , 2024 நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள முழுமையாக நிதி ஒதுக்கீட்டினை செய்ய வேண்டும் , அதீத பணிநெருக்கடி அளிக்கப்படுவதை தவிர்த்து சிட்டாப்பணிகளை செம்மையாக மேற்கொள்ள உரிய கால அவகாசம் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் , மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வருவாய் துறை பணிகள் இன்று தேக்கமடைந்துள்ளது.

Tags

Next Story