திருப்பூரில் உரிய ஆவணமில்லாத ரூ. 3. 81 லட்சம் பறிமுதல்

திருப்பூரில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறையையொட்டி உரிய ஆவணமில்லாத ரூ. 3,81 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

நாட்டின் 18-வது மக்களவைத் தேர்தல் கடந்த 16-ஆம் தேதி மதியம் அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அதன்படி ரூபாய் 50,000 க்கு மேல் ரொக்க பணம் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லும் நபர்களை கண்காணிக்க தனிப்படை குழுக்களாக அமைக்கப்பட்டு வாகனத்தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் பாராளுமன்ற தொகுதி உள்ளடங்கிய திருப்பூர் 114-தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான திரு.பவன்குமார் ஜி கிரிப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நிலை கண்காணிப்பு 3 குழு (SSTA) , பறக்கும் படை (FS) 3 குழு, ஒளிப்பதிவு கண்காணிப்பு 2 குழு (VS), என 8 குழுக்கள் அமைக்கப்பட்டு 3 வாகனங்களில் GPRS பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி இன்று 18-03-2024 காங்கேயம் ரோடு, பெம் ஸ்கூல் அருகே நிலை கண்காணிப்பு (SSTA)குழு அலுவலர் ராஜவேல், சப் இன்ஸ்பெக்டர் முகமது ஷேக் உள்ளிட்டவர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பி.என்.ரோடு, பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது நான்கு சக்கர வாகனத்தை சோதனை செய்த போது அதில் 3 லட்சத்து 6 ஆயிரத்தி 500 ரூபாய் உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்தது. தெரிய வந்தது. அதேபோன்று செந்தில்குமார் என்பவரிடமிருந்து ரூபாய் 74,600 பறிமுதல் செய்யப்பட்டது.

அதனை மாநகராட்சி ஆணையாளரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன் குமார் ஜி.கிரிப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் உரிய ஆவணங்களை காண்பித்து. பணத்தைப் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

Tags

Next Story