தமிழகத்தில் 20 பேருக்கு மட்டுமே புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் தொற்று

தமிழகத்தில் 20 பேருக்கு மட்டுமே புதிய வகை  ஒமைக்ரான்  வைரஸ் தொற்று

தமிழகத்தில் 20 பேருக்கு மட்டுமே புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

தமிழகத்தில் 20 பேருக்கு மட்டுமே புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 20 பேருக்கு மட்டுமே புதிய வகை ஒமைக்காரன் வைரஸ் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் 8.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய எம்ஆர்ஐ ஸ்கேன் திறப்பு விழா மற்றும் நாட்றம்பள்ளி அடுத்த ஜங்களாபுரம் பகுதியில் துணை சுகாதார நிலையம் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஜங்களாபுரம் குடியான குப்பம் உள்ளிட்ட 14 இடங்களில் தல முப்பது லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மொத்தம் 4.20 கோடி செலவில் புதியதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையத்தை மருத்தும் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பரமணியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் பயனாளிகளுக்கு மக்களை தேடி மருத்துவ பெட்டகம் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், புற்றுநோய் கண்டறியப்பட்ட நபர்களுக்கு மருந்து மாத்திரைகள், மூக்கு கண்ணாடி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் 8.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய எம்ஆர்ஐ ஸ்கேன் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. அதனையும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில் கேரள மாநிலத்தில் தற்போது புதிய வகை ஒமைக்காரன் வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதை தமிழ்நாட்டில் கட்டுபடுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தமிழ்நாட்டில் இந்த ஓமைக்காரன் தொற்று 20 நபர்களுக்கு மட்டுமே இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை தொற்றை தடுக்கும் வகையில் கேரள மாநில எல்லைப் பகுதிகளில் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பற்றாக்குறையாக உள்ள மருத்துவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நியமிக்க பட உள்ளது மேலும் மருந்தாளுநர்கள், செவிலியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். கொரானோ நேரத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வேண்டும் எனவும் வழங்கக் கூடாது எனவும் பல தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்ததால் காலதாமதம் ஏற்பட்டது. அதற்கான தீர்வும் உடனடியாக எடுக்கப்படும் எனவும் கூறினார்

மேலும் இந்த நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் செந்தில் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, திட்ட இயக்குனர் செல்வராசு, அரசு அதிகாரிகள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story