திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ

திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் திருச்சியில் போட்டியிடும் வேட்பாளர் துரை வைகோ என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் திருச்சியில் போட்டியிடும் வேட்பாளர் துரை வைகோ என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார். இவர் மதிமுகவில் தலைமை நிலைய செயலாளராக உள்ளார்.துரை வைகோ, திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட மதிமுக ஆட்சி மன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.கடந்தமுறை திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் சார்பில், 2019ஆம் ஆண்டு மக்களவைத் தொகுதியில் திருநாவுக்கரசர் போட்டியிட்டு, மக்களவை உறுப்பினர் ஆனார் என்னும் நிலையில், தற்போது துரை. வைகோ திமுக கூட்டணி சார்பில், திருச்சியில் போட்டியிடுகிறார்.

Tags

Next Story