திருச்சியில் தா. பாண்டியன் நினைவு நாள் அனுசரிப்பு

திருச்சியில் தா. பாண்டியன் நினைவு நாள் அனுசரிப்பு
X

தா. பாண்டியன் நினைவு நாள் 

திருச்சியில் நடந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தா. பாண்டியன் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வில் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தா. பாண்டியன் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பில் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு புறநகர் மாவட்ட செயலாளர் செ. ராஜ்குமார் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் எஸ். சிவா முன்னிலை வகித்தார். தோழர் தா. பா அவர்களுடைய படத்திற்கு மாலை அணிவித்து மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் எம். செல்வராஜ் நினைவு பேருரை ஆற்றினார். தொடர்ந்து ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளர் க. சுரேஷ் தா. பா நினைவுகளை பற்றி விளக்கி பேசினார்.

இதில் மாணவர் பெருமன்ற மாநிலத் தலைவர் க. இப்ராகிம், இடைகமிட்டி செயலாளர்கள் இரா. சுரேஷ் முத்துசாமி, அ. அஞ்சுகம், பி. ராஜா புறநகர் மாவட்ட இடைகமிட்டி செயலாளர் பழனிச்சாமி, மாதர் சங்கத் தோழர்கள் நிர்மலா, மருதம் பால், மற்றும் ஜி. ஆர். தினேஷ் குமார், மாக்சிம் கார்க்கி, சூர்யா, விஷ்வா, அசோக், துரைராஜ், அன்பழகன், காமேஷ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட துணைச் செயலாளர் சி. செல்வகுமார் நன்றி கூறினார்.

Tags

Next Story