வடகரை ஊராட்சியில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பிகள்...!

வடகரை ஊராட்சியில்   ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பிகள்...!

ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பிகள்

நாகை மாவட்டம் திருமருல் ஒன்றியம் வடகரை ஊராட்சியில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பிகள் சீரமைக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நாகை மாவட்டம் திருமருல் ஒன்றியம் வடகரை ஊராட்சியில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பிகள் சீரமைக்கப்படுமா பொதுமக்கள் எதிர்பார்ப்பு வடகரை ஊராட்சியில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பிகள் சீரமைக்கப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ஆபத்தான மின்கம்பம் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வடகரை ஊராட்சியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.வடகரையிலிருந்து ஆண்டிபந்தல் வழியாக திருவாரூர் செல்லும் சாலை உள்ளது.திருமருகல், திச்செங்கட்டாங்குடி, திருகண்ணபுரம், கோட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

அதேபோல மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை உள்ளுர் மற்றும் வெளியூர்களுக்கு எடுத்துச் செல்வதற்கும் அந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த நிலையில் வடகரையிலிருந்து இரயில்வே கேட் இடையே உள்ள சாலையில் வயல்வெளிகளில் அமைந்துள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது.

இதன் காரணமாக சாலையோரம் மற்றும் வயல் வெளியில் செல்லும் மின்கம்பிகள் 6-மாதங்களுக்கு மேல் தாழ்வாக செல்கிறது. இதனால் சம்பா நெல் சாகுபடி வேலைகள் நடைபெற்ற போது வயல்களில் உள்ள மின்கம்பங்களால் ஏதேனும் ஆபத்துகள் ஏற்படுமோ என்ற அச்சத்துடன் மூங்கில் மரங்களைக் கொண்டு முட்டுக்கொடுத்து விவசாய பணிகளை செய்து வருகின்றனர். நடவடிக்கை இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துக் காத்துள்ளனர்.

Tags

Next Story