வாக்காளர் அடையாள அட்டை வேண்டி பழங்குடியினர் பேரணி

வாக்காளர் அடையாள அட்டை வேண்டி பழங்குடியினர் பேரணி

 வந்தவாசியில், வாக்காளர் அடையாள அட்டை வேண்டி பழங்குடியினர் பேரணி

வந்தவாசியில், வாக்காளர் அடையாள அட்டை வேண்டி பழங்குடியினர் பேரணி
வந்தவாசியில், வாக்காளர் அடையாள அட்டை வேண்டி பழங்குடியினர் பேரணி நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் வசிக்கும் வாக்களிக்கும் தகுதியுடைய பழங்குடியினர்களுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வாக்காளர் அடையாள அட்டை வேண்டி பழங்குடியினர் பேரணியாக வந்து மனு அளிக்கும் நிகழ்வு, வட்டார செயலாளர் அப்துல்காதர் தலைமையில் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்தில் பல கிராமங்களில் ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் நூற்றுக்கணக்கானோருக்கு வாக்காளர் அடையாள அட்டை இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், பழங்குடிகளில் வாக்களிக்கும் தகுதியுடைய அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வேண்டி பழங்குடியினர் வந்தவாசி கோட்டைமூலை பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் வந்தனர். வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு வட்டாட்சியர் சதிஷிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் மாரிமுத்து, இடைக்குழு உறுப்பினர்கள் யாசர் அரபாத், நகர செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கரும்பு விவசாயி சங்க நிர்வாகி அரிதாசு உடன் இருந்தனர்.

Tags

Next Story