வேலூர் மாவட்டத்தில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

வேலூர் மாவட்டத்தில்  வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு
X

விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

வேலூர் மாவட்டத்தில் விபத்துகளை குறைக்க,வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் விபத்துகளை குறைக்க, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு . வேலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் சாலை விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் .

அதன் அடிப்படையில் இரவு பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் சாலையில் பயணிக்கும் இரண்டு ,மூன்று மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ,கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடீஸ்வரன் தலைமையில்,

வேலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு பள்ளிகொண்டா காவல் ஆய்வாளர் கருணாகரன் மற்றும் இரவு ரோந்து பணியில் இருந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள்இணைந்து , தண்ணீர்பாட்டில்கள் ,தேநீர் , பிஸ்கட் பாக்கெட்டுகளை கொடுத்து சாலை விபத்துகளை பற்றியும் வேலூர் மாவட்டத்தை விபத்து இல்லாத மாவட்டமாக உருவாக்க சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Next Story