விழுப்புரத்தில் ஒன்பது மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் ஆலோசனை !

விழுப்புரத்தில் ஒன்பது மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் ஆலோசனை !

ஆலோசனை கூட்டம்

விழுப்புரத்தில் ஒன்பது மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பதவிக்காலம் முடிவதற்குள் ஊராட்சிகளை தமிழக அரசு கலைத்தால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க தயாராக உள்ளதாக 9 மாவட்டங்களைச் சோ்ந்த ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு அறிவித்தது.விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களைச் சோ்ந்த ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அதன் மாநில ஒருங்கிணைப்பாளா் மாவோ தலைமையில் விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.விழுப்புரம் மாவட்டச் செயலா் அருணாமுருகன், மாவட்ட நிா்வாகிகள் பரமசிவம், கோவிந்தராஜ், சின்னதுரை, பீா் மொகிதீன், சுரேஷ், கூட்டமைப்பு நிா்வாகிகள் மகேஷ், பாலமுருகன் உள்ளிட்டோா் பேசினா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:ஊராட்சிகளின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாகும். ஆனால், பதவிக்காலம் முடிவதற்குள் ஊராட்சிகளைக் கலைப்பது இந்திய அரசமைப்புச் சட்டம் 73 பிரிவு 243-க்கு எதிரானது. விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஊராட்சிகளின் பதவிக்காலம் முடிவதற்குள் அதைக் கலைத்து, மாநிலம் முழுவதும் சோ்த்து உள்ளாட்சித் தோ்தலை நடத்தும் முடிவில் மாநில அரசு இருப்பதாக செய்திகள் வருகின்றன.எனவே, தமிழக அரசு, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக ஊராட்சி மன்றங்களைக் கலைக்க வேண்டாம். இதற்கான முடிவை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.ஒன்பது மாவட்டங்களுக்கும் சோ்த்து உள்ளாட்சித் தோ்தல் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களைத் தவிா்த்துதான் மற்ற மாவட்டங்களுக்கு தோ்தல் என்பதையும் அறிவிக்க வேண்டும்.விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பதவிக்காலம் முடிவதற்குள் ஊராட்சிகளை தமிழக அரசு கலைத்தால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்போம் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story