அயலகத் தமிழர் தின தொடக்க விழா

சென்னையில் அயலகத் தமிழர் தின விழா இன்று நடந்தது.

தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை மூன்றாம் ஆண்டாக ”தமிழ் வெல்லும்” என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு மாபெரும் அயலகத் தமிழர் தின விழா சென்னையில் இன்று நடத்தப்பட்டது. நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர் பெருமக்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பிக்கின்றார்கள்.

அதனடிப்படையில் முதல் நாளான நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அயலகத் தமிழர் விழாவை ஸ்டாலின் ஜனவரி 11ம் தேதி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றி, அங்கு அமைக்கப்பட்டுள்ள அயலகத் தமிழர் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியினை பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் நேரடியாக கண்டு பயன் பெறும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என பல்வேறு இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 16 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 4,550 மாணவ மாணவிகளும், 45 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 7,675 மாணவ மாணவிகளும், லெப்பைக்குடிக்காடு சமுதாயக் கூடத்தில் 150 பொதுமக்களுக்கும் என மொத்தம் 12,325 நபர்கள் அயலகத் தமிழர் தொடக்க விழாவினை நேரலையில் கண்டுகளித்துள்ளார்கள். இதில் கீழக்கணவாய் அரசினர் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கு செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் சார்பில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் , பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு, கல்லூரி மாணவர்களுடன் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சி குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக பேசி வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, கீழக்கணவாய் அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் முகேஷ்குமார், பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story