JCI சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
ஜேசிஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
நாமக்கல் ஜேசிஸ் சங்கத்தின் 47-வது ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஜேசிஸ் பவனில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் புதிய தலைவராக கார்த்திக் பொறுப்பேற்றுக் கொண்டார். இதேபோல் சங்கத்தின் செயலாளராக முருகேசன், பொருளாளராக பிரவீன்குமார் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு சங்கத்தின் உடனடி முன்னாள் தலைவர் சுரேஷ்காந்தி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவர் சுந்தரேஸ்வரன் மற்றும் ஜேசிஸ் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story