போச்சம்பள்ளியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா !

போச்சம்பள்ளியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா !

அதிமுக

போச்சம்பள்ளியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா : சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பங்கேற்பு.

போச்சம்பள்ளியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா : சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, முன்னாள் சட்டபேரவை உறுப்பினர் சிவிராஜேந்திரன் கலந்துகொண்டு துவக்கிவைத்தனர். தற்பொழுது நிலவிவரும் கோடை வெயிலின் தாக்கத்தால் அவதியுறும் மக்கள் சற்று இழைப்பாற்றும் விதமாக கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி நான்கு வழிசாலையில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பர்கூர் ஒன்றிய கழக செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார், மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் தூயமணி, மாணவர் அணி செயலாளர் வெற்றிசெல்வன், முன்னால் ஒன்றிய குழு துணை தலைவர் மற்றும் ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் திருமால், முன்னால் கவுன்சிலர் மற்றும் ஒன்றிய துணை செயலாளர் கே.சி.செல்வம், மாவட்ட விவசாய அணி துணை தலைவர் செட்டிகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் லட்சுமி சிவசங்கரன், கவிதா பழனி, மாவட்ட தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் குண சுந்தரி சீனிவாசன், முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் சக்கரவர்த்தி, கவுன்சிலர் ஐயப்பன், பைனான்ஸ்வேல், வெள்ளையன், ஊராட்சி கழக செயலாளர் வைரவன், குள்ளனூர் கிளை செயலாளர் விஜயன், ரஞ்சித், அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர், நகர செயலாளர் ரமேஷ்குமார் வரவேற்றார், நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, மற்றும் முன்னால் பர்கூர் சட்டபேரவை உறுப்பினர் சிவி.ராஜேந்திரன் கலந்துகொண்டு தண்ணீர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு, நீர் மோர், தர்பூசணி, இளநீர், ரஸ்னா, கேழ்வரகு மற்றும் கம்பம் கூல், மாம்பழம் ஜுஸ் வழங்கினார். இந்த விழாவில் கிளை செயலாளர்கள் ஸ்ரீ அண்ணாமலையார் கன்செக்ஸ்சன்ஸ் கார்த்திகேயன், பிரகாஷ், சேகர், அனீஸ்குமார், ஒன்றிய இணை செயலாளர் சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், கே.கே.முனுசாமி மற்றும் அதிமுக கட்சி முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர், நிகழ்ச்சி நிறைவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் சீனிவாசன் நன்றியுரை வழங்கினார்.

Tags

Read MoreRead Less
Next Story