செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் 2-ம் ஆண்டு இன்ட்ராக்ட் கிளப் தொடக்க விழா !

செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் 2-ம் ஆண்டு இன்ட்ராக்ட் கிளப் தொடக்க விழா !

செயின்ட் ஜான்ஸ் பள்ளி

சேலம் செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளியில் 2-ம் ஆண்டு இன்ட்ராக்ட் கிளப் தொடக்க விழா நடைபெற்றது.

சேலம் செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளியில் 2-ம் ஆண்டு இன்ட்ராக்ட் கிளப் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் தாரை.ராஜகணபதி தலைமை தாங்கி மாணவர்கள் பொது சேவையில் ஈடுபடுவதன் அவசியம் குறித்து விளக்கம் அளித்து பேசினார். சிறப்பு அழைப்பாளராக செயலாளர் சரவணன் கலந்து கொண்டு பேசினார்.

தொடர்ந்து புதிய மாணவர் சங்க தலைவராக பிலிப் சான்டினோ, செயலாளராக அல்டினோ பியல்மிட் உள்ளிட்ட 12 பேர் பதவி ஏற்றுக்கொண்டனர். விழாவில் பள்ளி முதல்வர் ஜோதி பெர்னான்டோ, ஆசிரியை கிருபா ராணி, ரோட்டரி சங்க செயலாளர் மோகன் மற்றும் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story