சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆதார் மையம் திறப்பு விழா

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆதார் மையம் திறப்பு விழா

ஆதார் மையம் திறப்பு விழா


சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆதார் மையம் திறக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஏற்காடு ஆதார் மையத்தை ஒன்றிய குழு தலைவர் ராணி அர்ஜுனன் திறந்து வைத்தார். சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 49 ஊராட்சிகளில் உள்ள கிராம பொதுமக்கள் பயன்பெறும் வகையில் எல்காட் நிறுவனத்தின் மூலம் ஆதார் மையம்தொடக்க விழா நேற்று மாலை நடைபெற்றது.

மையத்தை ஒன்றிய குழு தலைவர் ராணி அர்ஜுனன் தொடங்கி வைத்தார் . சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 49 ஊராட்சி சேர்ந்த பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் இளைஞர்கள் குழந்தைகள் என அனைவரும் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் புதியஆதார்பெறுவது,

பெயர் சேர்த்தல், நீக்கம் செய்வது, பிழை திருத்தம் செய்வது, முகவரி மாற்றம் போன்ற செயல்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென பொதுமக்களை ஒன்றிய குழு தலைவர் கேட்டுக்கொண்டார். படவிளக்கம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆதார் மையத்தை உடன் செந்தில்குமார்,விவசாய ஆத்மா குழு தலைவர் மணிமாறன் உள்பட பலர்.

Tags

Next Story