தலைமை அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் திறப்பு

தலைமை அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் திறப்பு

ஈரோடு மாவட்ட அரசு தலைமை அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்


ஈரோடு மாவட்ட அரசு தலைமை அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்

ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் ரூ.67.02 கோடி மதிப்பீட்டில் நரம்பியல் பிரிவு, இருதய நோய் சிகிச்சை பிரிவு, புற்றுநோய் சிகிச்சை பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நல அறுவை சிகிச்சை பிரிவு, பிளாஸ்டிக் சர்ஜரி பிரிவு, தீக்காய சிகிச்சை பிரிவு, சிறுநீரக பிரிவு, சீமாங் பிரிவு போன்ற உயர் சிறப்பு கிச்சை அளிக்க 8 மாடிகள் கொண்ட பல்நோக்கு உயர் சிறப்பு சிகிச்சை பிரிவுகள் மற்றும் கூடுதல் படுக்கை வசதிகள் அடங்கிய மருத்துவமனையாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கூடுதல் கட்டிடத்ததை தமிழக முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார்.ஈரோடு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா , ஈரோடு கிழக்கு தொகுதி MLA EVKS இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தனர்.

Tags

Next Story