திருப்போரூர் கந்தசாமி திருக்கோவிலில், ஆதினக்குடியிருப்பு கட்டிடம் திறப்பு

திருப்போரூர் கந்தசாமி திருக்கோவிலில், ஆதினக்குடியிருப்பு கட்டிடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

திருப்போரூர் கந்தசாமி திருக்கோவிலில், ஆதினக்குடியிருப்பு கட்டிடத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை அடுத்து பேரூராட்சித் தலைவர் தேவராஜ் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக பல்வேறு திருப்பணிகளை திறந்து வைத்தார்.

அதன்படி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோவிலில் 94 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ஆதின குடியிருப்பு கட்டிடத்தை தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததையடுத்து திருப்போரூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லக்ஷ்மி காந்த பாரதிதாசன் ஆகியோர் ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றியும் அலுவலக பயன்பாட்டிற்கு ஒப்படைத்தனர். நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் குமரவேல், கோவில் மேலாளர் வெற்றிவேல், திருக்கோவில் சிவாச்சாரியார்கள், பணியாளர்கள் என பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story