காங்கேயத்தில் அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா

காங்கேயத்தில் அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா

தேர்தல் பணிமனை திறப்பு விழா 

காங்கேயம் சென்னிமலை சாலையில் அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அ.தி.மு.க வின் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் . அசோக் குமார் அவர்கள் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் காங்கேயம் சென்னிமலை சாலையில் நடைபெற்றது. இதில் அதிமுக தலைமை நிலைய செயலாளரும்,

எதிர்க்கட்சி கொறடா, கோவை மண்டல தேர்தல் பிரிவு பொறுப்பாளருமான S.P. வேலுமணி, முன்னாள் அமைச்சர், ஈரோடு புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் திரு கே .ஏ. செங்கோட்டையன், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன் MLA, முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் NS. நடராஜன், சிவசாமி, சிவசுப்ரமணியம் ஆகியோர் பங்கேற்றனார். இந்த நிகழ்வில் தேமுதிக, எஸ்.டி.பி.ஐ, புதிய தமிழகம், உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.

பின்னர் இதைத்தொடர்ந்து காங்கேயம் சென்னிமலை சாலையில் தேர்தல் பணிமனை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அவர், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் ஆசியுடன் பொதுச் செயலாளர் எடப்பாடி அவர்களால் ஈரோடு வெற்றி வேட்பாளராக ஆற்றல் அசோக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், ஈரோடு நாடாளுமன்றத்தை பொருத்தவரை வெற்றி உறுதியாகிவிட்டது.

50000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார், கடந்த 3 ஆண்டுகாலமாக திமுக எந்த ஒரு திட்டங்களையும் பொதுமக்களுக்கு கொடுக்கவில்லை, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது, தமிழகம் போதைக்கு அடிமையாகி உள்ளது எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு நாடாளுமன்றத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று பேசினார்.

Tags

Next Story