கிருபானந்த வாரியார் பொறியியல் கல்லூரியில் அன்னபூர்ணா ஆடிட்டோரியம் திறப்பு

கிருபானந்த வாரியார் பொறியியல் கல்லூரியில் அன்னபூர்ணா ஆடிட்டோரியம் திறப்பு
X

சேலம் விநாயகா மிஷனின் கிருபானந்த வாரியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அன்னபூர்ணா ஆடிட்டோரியம் என்ற பெயரில் புதிதாக அரங்கம் திறப்பு விழா நடந்தது. 

கிருபானந்த வாரியார் பொறியியல் கல்லூரியில் அன்னபூர்ணா ஆடிட்டோரியம் திறப்பு
சேலம் விநாயகா மிஷனின் கிருபானந்த வாரியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அன்னபூர்ணா ஆடிட்டோரியம் என்ற பெயரில் புதிதாக அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது.விநாயகா மிஷன்ஸ் ரிசர்ச் பவுண்டேசன் வளாக மேம்பாடு நிர்வாக இயக்குனர் கோகுல் கிருஷ்ணன், சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய ஆடிட்டோரியத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், விநாயகா மிஷன்ஸ் ரிசர்ச் பவுண்டேசன் இயக்குனர் ராமசாமி, பதிவாளர் நாகப்பன், பொறியியல் கல்லூரி முதல்வர் ஆர்.சசிகுமார், துணை முதல்வர் நித்யா மற்றும் வெங்கடேசன், ராஜன் உள்பட அனைத்து துறை தலைவர்கள், அனைத்து அமைப்பு நிறுவனங்களின் ஆசிரிய உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த அன்னபர்ணா ஆடிட்டோரியமானது கல்வி கலாச்சாரம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும், மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை மேம்படுத்துவதற்கு உகந்த சூழலை வழங்கியுள்ளதாக கல்லூரி ஆசிரியர்கள் தெரிவித்தனர். முடிவில், மாணவ, மாணவிகளின் தனி மற்றும் குழு நடனம், பேச்சு போன்ற கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Tags

Next Story