பாஜக சட்டமன்ற தொகுதி அலுவலக திறப்பு விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பாஜக கட்சியின் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா மற்றும் மாநில தலைவர் பங்கேற்கும் என்மண் என் மக்கள் யாத்திரை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும் மாவட்ட துணைத் தலைவருமான எம் ஆர் ராஜேந்திரன் வரவேற்றார் பாராளுமன்ற தொகுதி அமைப்பாளர் முன்னாள் எம் பி நரசிம்மன் பாராளுமன்ற தொகுதி இணை அமைப்பாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவரும் பெருங்கோட்ட பொறுப்பாளருமான கேபி ராமலிங்கம் அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றிய போது மாநில தலைவர் அண்ணாமலை ஜனவரி 10ஆம் தேதி ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு பயணம் வர உள்ளதால் அனைத்து மாநில மாவட்ட வட்டார ஒன்றிய பொறுப்பாளர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சரவணன் மாவட்ட பொருளாளர் கவியரசு மாவட்டத் துணைத் தலைவர் ஆனந்தன் ஒன்றிய தலைவர் சிங்காரவேல் இணை அமைப்பாளர் சங்கர் சிவா நமச்சிவாயம் கிரிதரன் அருணாசலம் மகளிர அணி நிர்வாகிகள் விமலா சுமதி ராஜேஸ்வரி கோமதி சங்கீதா உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர் முடிவில் மாவட்ட பொதுச் செயலாளர் சங்கர் நன்றி தெரிவித்தார்.
ஊத்தங்கரையில் பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் பேசும்போது தமிழக பாஜக நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி கொண்டிருக்கிறது. நாடாளுமன்ற தொகுதி அமைப்பாளர் இணையமைப்பாளர் சட்டமன்றத் தொகுதி அமைப்பாளர் இணை அமைப்பாளர் என 39 பாராளுமன்ற தொகுதி 234 சட்டமன்றத் தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தேர்தல் அலுவலகம் தொடங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் ஒரு வாரத்திற்குள் முடிவடையும். பொது மக்களை அணுகி இயக்க பணிகளை ஆற்றுவதற்கு பாஜக தயாராகி வருகிறது. பாஜக தலைவர் அண்ணாமலை ஜனவரி 10ஆம் தேதி ஊத்தங்கரைக்கு வருகை தருகிறார் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது ஊத்தங்கரைக்கு சிப்காட் கொண்டு வர வேண்டும் மிகப்பெரிய தொழில் பேட்டையை ஊத்தங்கரையில் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் குறித்து மாநில தலைவர் பேசுவார் என தெரிவித்தார். இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட வரதராஜன் தலைமை பொறுப்பாளர் சங்கீதா மூலமாக 500க்கும் மேற்பட்ட மகளிர்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்தனர்