விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நூல் நிலையம் திறப்பு விழா

குமாரபாளையத்தில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தளபதி விஜய் நூலகம் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தளபதி விஜய் நூலகம் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது அனைத்து மாணவ, மாணவியர் கல்லூரி மாணவ மாணவியர் மத்தியில் கல்வியை முழுமையாக கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிப்படையில்,

அவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக முழுவதும் நடிகர் விஜய் உத்தரவின் பெயரில் அவருடைய ரசிகர் மன்றத்தினர் மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் இன்று தளபதி விஜய் நூலகத்தை திறந்து வைத்து வரும் நிலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சட்டமன்றத் தொகுதி சார்பில், குமாரபாளையம் பைபாஸ் சாலை அருகே அமைந்துள்ள தனியார் திரையரங்கம் எதிரே புதிதாக தளபதி விஜய் நூலகம் திறப்பு விழா நிகழ்வு நடைபெற்றது .

இதில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் மேற்கு மாவட்ட தலைவர் எஸ்எம் சதீஷ் அவர்கள் கலந்து கொண்டு நூலகத்தை திறந்து வைத்தார் . இதில் சுதந்திரப் போராட்ட வீரர்கள், அறிவியல் விஞ்ஞானிகள், தேச தலைவர்கள் ,திராவிட இயக்க சிந்தனையாளர்கள், உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் புத்தகங்கள் நூற்றுக்கணக்கில் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் கூறும் பொழுது, அனைவரும் கல்வி அறிவு மேம்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நூலகம் திறக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்து பொதுமக்களும், மாணவ, மாணவியரும் இந்த நூலகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்தனர். இந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் கலந்து கொண்டனர்

Tags

Next Story