தாங்கல் குளம் திறப்பு விழா : அமைச்சர் பங்கேற்பு

செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில், ரூ.192.00 இலட்சம் மதிப்பீட்டில் புரனமைக்கப்பட்ட தாங்கல் குளம் திறப்பு விழா நடந்தது.

செங்கல்பட்டு மாவட்டம்,நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில், ரூ.192.00 இலட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-22 ன்கீழ் வார்டு எண்.13ல் புரனமைக்கப்பட்ட தாங்கல் குளம் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் மற்றும் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதசூதனன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் திரு.எம்.கே.டி.கார்த்திக், துணைத் தலைவர் லோகநாதன் மறைமலைநகர் நகரமன்ற தலைவர் திரு.சண்முகம், நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகராட்சி ஆணையர் ஆகியோர் உள்பட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி, பிரதிநிதிகள்,வார்டு உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் , பொதுமக்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story