சம்பளம்மா கோவில் திருவிழா மாட்டு சந்தை துவக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த திம்மச்சந்திரம் கிராமத்தில் ஸ்ரீ சப்பலம்மா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைப்பெறும் மாட்டுத்திருவிழா பிரபலமாக இப்பகுதியில் நடைபெற்று வருகிறது. 200 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டுதோறும் தை மாத இறுதி வாரத்தில் தொடங்கும் இத்திருவிழாவில் நாட்டு மாடுகள், ஜல்லிக்காட்டு காளை வகை மாடுகள் வாங்குவதும், விற்பதுமான பண்டிகையாக சப்பலம்மா கோவில் திருவிழா விளங்குவதால், இந்த மாட்டுப்பண்டிகையில் மாடுகளை வாங்கவும் விற்கவும் தமிழகம் மட்டுமல்லாது,ஆந்திர,கேரளா,மகாராஷ்டிரா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் கலந்து கொள்ளும் மாபெரும் பண்டிகை நடைபெற்று வருகிறது.
இங்கு ஒருஜோடி மாடுகள் ஒரு லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யபடுவதால் இந்த மாட்டுத்திருவிழாவை பலரும் எதிர்நோக்கி உள்ளனர் தினமும் விஷேச பூஜைகளுடன் திருவிழா நடைப்பெறும், மாட்டு விற்பனையில் பல கோடி ரூபாய் வர்த்தகமும் நடைப்பெற உள் ளது.. இதில் சப்பளம்மா கோவில் அறக்கட்டளை தலைவர் கஜேந்திரமூர்த்தி, துணை தலைவர் தியாகராஜன்,கிருஷ்ணப்பா,முனிராஜ், மகேஷ், கெம்பண்ணா , நடராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளும் சுற்றுவட்டார கிராம முக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்தனர்