ஐஆா்எம்இஎல் நிறுவனத்தின் நகர எரிவாயு விநியோகிக்கும் நிலையம் திறப்பு

எரிவாயு நிறுவனம் திறப்பு
ஐஆா்எம்இஎல் நிறுவனம், திருச்சியில் தனது முதல் நகர எரிவாயு விநியோகிக்கும் நிலையம் மற்றும் மதா் நிலையத்தை வேங்கூரில் செவ்வாய்க்கிழமை திறந்துள்ளது.
ஐஓசிஎல் நிா்வாக இயக்குநா் ஷைலேஷ் திவாரி, ஐஆா்எம்இஎல் நிறுவன தலைமை செயலதிகாரி கரண் கௌஷல் ஆகியோா் திறந்து வைத்தனா். இதில், ஐஆா்எம்இஎல் அலுவலா்கள், எண்ணெய் நிறுவனங்கள், திருச்சி பேருந்து சங்கம், பிற சங்கங்களின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
இதன் மூலம் திருச்சி மாநகராட்சி பகுதியில் உள்ள வீட்டிற்கு குழாய் வழியாக எரிவாயு வழங்கும் திட்டத்தை ஐஆா்எம்இஎல் நிறுவனம் தொடங்கி உள்ளது. இந்த நகர எரிவாயு விநியோகிக்கும் நிலையத்தின் திறன் 26,000 எஸ்சிஎம்எச், மதா் நிலையத்தின் திறன் 3,600 எஸ்சிஎம்எச் கொண்டுள்ளது.
வீடுகள், வணிக மற்றும் தொழில்துறை வாடிக்கையாளா்களின் எரிசக்தி தேவைகளை பூா்த்தி செய்ய திருச்சி மாவட்டம் முழுவதும் குழாய் அமைக்க ஐஆா்எம்இஎல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
