ரூ.7 லட்சத்தில் கணினி அறை திறப்பு விழா

ரூ.7 லட்சத்தில் கணினி அறை திறப்பு விழா

தேவிகாபுரம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் , 'நம்ம ஊரு நம்ம பள்ளி' திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சத்தில் கணினி அறை திறப்பு விழா நடந்தது.

தேவிகாபுரம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் , 'நம்ம ஊரு நம்ம பள்ளி' திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சத்தில் கணினி அறை திறப்பு விழா நடந்தது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி ஆணையின்படி ,முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி ,செய்யார் கல்வி மாவட்ட அலுவலர் எல்லப்பன் ஆகியோர் வழிகாட்டுதலின்படி, ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் 15 கணினி அமைக்கப்பட்டு மாணவிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் சரவணன் தலைமை தாங்கினார்.துணைத் தலைவர் மல்லிகா திருநாவுக்கரசு ,பள்ளி மேலாண்மை குழு தலைவர் சரோஜினி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அனைவரையும் உதவி தலைமை ஆசிரியர்கள் மேகலா ,சடகோபன் ஆகியோர் வரவேற்றனர்.தேவிகாபுரம் ஊராட்சி மன்ற தலைவர்வி.எம். டி.வெங்கடேசன் ,பெரியநாயகி அம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் சிறப்பு பூஜை செய்து,கணினி வகுப்பறையை தொடங்கி வைத்தனர்.

மேலும் இதே பள்ளியில் ரூபாய் ஏழு லட்சத்தில் புனரமைக்கப்பட்ட இரண்டு வகுப்பறைகளையும் திறந்து வைத்தனர்.நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மரிய அகி சிலியா,பூங்கொடி, சத்யா, புனிதவதி ,தேன்மொழி ,பிரியா மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story