சேந்தமங்கலம் கல்லுாரியில் கணினி அறிவியல் மன்ற துவக்க விழா

X
சேந்தமங்கலம் கல்லுாரி
சேந்தமங்கலம் கல்லுாரியில் கணினி அறிவியல் மன்ற துவக்க விழா நடைபெற்றது.
சேந்தமங்கலம், அக். 21 சேந்தமங்கலம் அடுத்த வெட்டுக்காட்டில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் மன்றம் துவக்க விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் பாரதி தலைமை வகித்தார்.
விழாவிற்கு அமெரிக்க நாட்டில் சிட்டி பேங்கில் பணி புரியும் அருள்ஜோதி பங்கேற்று கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கருத்துக்களை வழங்கினார். விழாவில் கணினி அறிவியல் துறை தலைவர் பிரதாப் சக்கரவர்த்தி, உடற்கல்வி இயக்குனர் ரவி, கணினி அறிவியல் துறை கௌரவ விரிவுரையாளர் தமிழரசி மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.
Next Story
