கொல்லங்கோடு நகராட்சியில் காங்கிரீட் சாலை திறப்பு

கொல்லங்கோடு நகராட்சியில் காங்கிரீட் சாலை திறப்பு
சாலையை  திறந்த ராஜேஷ்குமார் எம் எல் ஏ
கொல்லங்கோடு நகராட்சியில் ரூ.12.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலை மற்றும் கல்வெட்டை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.
குமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கொல்லங்கோடு நகராட்சியில் உள்ள நம்பாளி – படஓடி செட்டிவிளை செல்லும் சாலையை சீரமைத்து தர வேண்டும் மற்றும் ஆலங்கோடு – செம்பகம்முக்கு விளாத்திவிளை செல்லும் பாதையில் பால்குளத்திலிருந்து வெளியேறும் நீர் செல்ல சிறு கல்வெட்டு அமைத்து தர வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கையின் படி, நம்பாளி – படஓடி செட்டிவிளை செல்லும் சாலை காங்கிரீட் தளம் அமைக்க ரூ. 7.50 - லட்சம், ஆலங்கோடு – செம்பகம்முக்கு விளாத்திவிளை செல்லும் பாதையில் பால்குளத்திலிருந்து வெளியேறும் நீர் செல்ல சிறு கல்வெட்டை அமைக்க ரூ. 5 - லட்சம் என மொத்தம் ரூ. 12.50 - லட்சம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்றன. இவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கொல்லங்கோடு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பால்ராஜ், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் ராஜேஷ், மாவட்ட நிர்வாகிகள் டென்னிஸ், அருளானந்தம், அசோகன், ஸ்டீபன்,ரெஜிஷ் நகராட்சி கவுன்சிலர் ஜெரோம், அறங்காவலர் குழு உறுப்பினர் துளசிதரன், நிர்வாகிகள் அமீன், பிரவின், அரவிந்த், பைஜூ, கொல்லங்கோடு நகராட்சி துணை பேபி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story