தொட்டியம் அருகே ஆதரவற்றோர் முதியோர் இல்ல திறப்பு விழா

தொட்டியம் அருகே  ஆதரவற்றோர் முதியோர் இல்ல திறப்பு விழா

முதியோர் இல்லம் திறப்பு விழா

தொட்டியம் அருகே காட்டுப்புத்தூரில் ஆதரவற்றோர் முதியோர் இல்ல திறப்பு விழா நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள காட்டுப்புத்தூரில் அறம் மகிழ் அறக்கட்டளையின் சார்பில் உலக மாற்றுத் திறனாளர்கள் தினவிழா, ஆதரவற்றோர் இல்ல திறப்பு விழா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்து ஆதரவற்றோர் இல்லத்தை திறந்து வைத்து200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அறம் மகிழ் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் லோகநாதன் தவமணி முன்னிலை வகித்தார்.

சென்னை அகல் பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் வெங்கடேஷ் வளர்மதி, திருச்சி அமிர்தம் அறக்கட்டளை நிறுவனர் விஜயகுமார் காட்டுப்புத்தூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா சுரேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். அதனை தொடர்ந்து மூன்று சக்கர சைக்கிள் மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கும், தையல் மெஷின் மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கும், தலா 5 கிலோ அரிசி 200 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளாக எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் வழங்கினார். முன்னதாக அறம் மகிழ் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் சுதா வரவேற்றார். விழாவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை செய்கை மொழிபெயர்ப்பாளர் அகிலா கண்ணன் தொகுத்து மாற்று திறனாளிகளிடம் எடுத்துரைத்தார். நிகழ்வில் காட்டுப்புத்தூர் ஸ்ரீராம சமுத்திரம் சின்ன பள்ளிபாளையம் பெரிய பள்ளிபாளையம் உன்னீயூர் கிடாரம் முருங்கை, பிடாரமங்கலம் நாகையநல்லூர் சீதப்பட்டி எம் களத்தூர் வாழ்வேல் புத்தூர் தோளூர்பட்டி நத்தம் புத்தூர் காடுவெட்டி உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story