நேரடி கொள்முதல் நிலையம் திறப்பு விழா

நேரடி கொள்முதல் நிலையம் திறப்பு விழா
X

நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறப்பு

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூனாம்பேடு, இல்லீடு, காவனூர், இரும்புலி, பருக்கல், நாங்களத்தூர் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம், செய்யூர் தொகுதியில் விசிக கட்சி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு. பாபு, ஒன்றிய பெருந்தலைவர் ஏழுமலை, வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

Tags

Next Story