மாவட்ட சமூக திறன் பயிற்சி அலுவலகம் திறப்பு
தர்மபுரி பேருந்து நிலையம் அருகே பூமணி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சமூக திறன் பயிற்சி அலுவலகத்தை மகளிர் திட்ட அலுவலர் முகமது நசிர் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க தர்மபுரி மாவட்டத்தின் சார்பில் சமூக திறன் சிறுதானியம் தயாரிக்கும் பயிற்சி அலுவலகத்தை மகளிர் திட்ட முகமது நசிர் திறந்து வைத்தார்.தர்மபுரி இந்தியன் வங்க ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மையம் அலுவலர் புவனேஸ்வரி குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். மாவட்ட தொழில் அலுவலர் வாசுகி வெங்கடேஸ்வரி அரசு திட்டங்கள் கடன் பெறுவது பற்றி விரிவாக எடுத்து கூறினார் மகளிர் திட்ட அலுவலர் முருகேசன் .மாலதி .மற்றும் மாவட்ட வள பயிற்றுநர் தென்னரசு. வட்டார இயக்க மேலாளர் ரமேஷ் .சங்கீதா, சுயதொழில் செய்வது எப்படி பயிற்சி அளித்தார். இந்த பயிற்சியில் சிறுதானியம் மதிப்பு கூட்டு உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியில் .ராகி லட்டு ,சாமை ,குதிரைவாலி பிஸ்கட் ,கம்பு பிஸ்கட்,சோளம் பிஸ்கட், ராகி லட்டு .தினை லட்டு. கம்பு லட்டு .ராகி பிஸ்கட் முறுக்கு,கம்பு முறுக்கு , தயாரிப்பது எப்படி பயிற்சி அளிக்கப்பட்டது.
Next Story