குமாரபாளையத்தில் திமுக தேர்தல் பணிமனை திறப்பு

குமாரபாளையத்தில் திமுக தேர்தல் பணிமனை திறப்பு

தேர்தல் பணிமனை திறப்பு 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில்  தி.மு.க. தெற்கு நகரம் சார்பில் நடந்த, தேர்தல் பணிமனை  திறப்பு விழாவில், அமைச்சர், மாவட்ட செயலர் மற்றும்  வேட்பாளர் பங்கேற்றனர்

லோக்சபா தேர்தல் வருவதையொட்டி அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். அந்தந்த பகுதி வேட்பாளர்கள் பொதுமக்கள் மத்தியில் வந்து தேர்தல் பிரச்சாரம் செய்யும் பணியை துவக்கி வருகின்றனர். குமாரபாளையத்தில் தி.மு.க. தெற்கு நகரம் சார்பில் நடந்த தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன் தலைமை வகித்தார்.

மாவட்ட அமைச்சர் மதிவேந்தன், தி.மு.க. செயலர் மதுரா செந்தில், ஈரோடு தொகுதி தி.மு.க. வேட்பாளர் பிரகாஷ் சேர்ந்து, தேர்தல் பணிமனையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். காங்கிரஸ் ஜானகிராமன், சி.பி.ஐ. நகர செயலர் கணேஷ்குமார், சி.பி.எம். நகர செயலர் சக்திவேல், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலர் காமராஜ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா உள்ளிட்ட பலர் குத்துவிளக்கேற்றினர்.

வேட்பாளர் பிரகாஷ் பேசியதாவது: பா.ஜ.க. 100 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது. இந்தியா கூட்டணி 450க்கும் மேற்பட்ட இடங்களில் மாபெரும் வெற்றி பெறும். நான் இன்றும் கிளை செயலர் மகன்தான். கிளை செயலர் மகனுக்கும் தி.மு.க.வில் எம்.பி. வேட்பாளர் சீட் கொடுக்கப்பட்டதுதான் தி.மு.க. சாதனை. எதிரணி வேட்பாளர் ஓட்டுக்கள் பெற நாடகம் ஆடி வருகிறார். 10 ரூபாய்க்கு உணவு, இலவச வைத்திய வசதி என பிரம்மாண்டம் காட்டி வரும் அவர், அவர் நடத்தி வரும் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு 10 ரூபாய்க்கு கல்வி தர சொல்லுங்கள், இலவச வைத்தியம் கொடுக்க சொல்லுங்கள் பார்ப்போம். அவர் நாடகம் கண்டு ஏமாற வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், முன்னாள் நகராட்சி தலைவர் ஜகந்நாதன், தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு நிர்வாகி மாணிக்கம், மகளிரணி தேவி, ராதிகா உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story