திருப்பூரில் திமுக தேர்தல் பணிமனை திறப்பு

திருப்பூரில் திமுக தேர்தல் பணிமனை திறப்பு

திருப்பூரில் திமுக தேர்தல் பணிமனை திறப்பு

திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர்களின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பணிமனையை என். ஆர்.இளங்கோ எம்.பி திறந்து வைத்தார்.

திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணி சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்காக பணிமனை திறப்பு விழா நேற்று மாலை 5 திருப்பூர், தாராபுரம் சாலை, பலவஞ்சிபாளையம் பிரிவில் அமைந்துள்ள மாவட்டக் கழக அலுவலகமான "கலைஞர் அறிவாலயம்","தளபதி அரங்கில்" நடந்தது. இதற்கு தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் தலைமை தாங்கினார். இதில் கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கழக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு தேர்தல் பணிமனையை திறந்து வைத்தனர்.

இதன் பின்னர் நடந்த நிகழ்ச்சியில் கழக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. பேசியதாவது:- நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் வழக்கறிஞர்கள் மிகவும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். ஏனென்றால் மிகவும் முக்கியமான தேர்தல் இது ஆகும். மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு ஏராளமான சட்டங்களில் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் தொழிலாளர்கள் முதல் பாமர மக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மீண்டும் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடைமுறையே இருக்காது.

அதிபர் ஆட்சி போன்று நடைபெறும். எனவே இந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் நாம் வெற்றி பெற வழக்கறிஞர்கள் பங்களிப்பு முக்கியமானதாக இருக்க வேண்டும். தங்களது பகுதியில் இருக்கிற வாக்காளர்கள் குறித்து வழக்கறிஞர்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். கடந்த தேர்தலில் போன்று சிறப்பாக வழக்கறிஞர்கள் பணியாற்ற வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் 40 தொகுதிகளையும் திமுக மற்றும் கூட்டணி கைப்பற்றி அபார வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

மாநில சட்டத்துறை இணை செயலாளர் ரவிச்சந்திரன், திருப்பூர் தெற்கு மாவட்ட கழக வழக்கறிஞர் அணி தலைவர் செல்வராஜ் உள்பட பலர் வாழ்த்தி பேசினர். இதில் துணைத்தலைவர் சி.நடராஜன், அமைப்பாளர் டி.எஸ்.பொன்ராஜ், துணை அமைப்பாளர்கள் ஐயப்பன், சி.எஸ்.சிவக்குமார், எம்.இந்திரகலை நாச்சியார், இரா.மகேஸ்வரன், கே.ஷாஜகான் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வக்கீல் முருகானந்தம் வரவேற்று பேசினார்.

Tags

Next Story