போடி திமுக கட்சி அலுவலகம் திறப்பு விழா

போடி திமுக கட்சி அலுவலகம் திறப்பு விழா

தங்க தமிழ்செல்வன் பேச்சு 

கடந்த மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த ஒரே தொகுதி தேனி தொகுதி திமுக எளிதில் ஜெயிக்க கூடிய திருநெல்வேலி மக்களவைத் தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்து சவாலான தேனி தொகுதியை தளபதி ஸ்டாலின் எடுத்துக் கொடுத்துள்ளார். போடி திமுக கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் கட்சியினரிடம் தங்கத்தை செல்வன் பேச்சு.

தேனி பாராளுமன்ற தொகுதிக்கு திமுக கட்சியின் சார்பில் அக்கட்சியின் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் போடிக்கு வந்த தங்க தமிழ்ச்செல்வனை திமுக நகர் கழகத்தினர் சுமார் 200க்கும் மேற்பட்டோர் தேவர் சிலை முன்பாக மேளதாளங்களுடன், பட்டாசுகள் வெடித்து மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

பின்பு தேவர் சிலைக்கு மாலை அணிவித்த தங்க தமிழ்ச்செல்வன் கட்சி திமுக கட்சியின் காரியாளத்தை திறந்து வைத்தார். பின்னர் பேசி தங்க தமிழ்ச்செல்வன்: கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 39 இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி வெற்றி பெற்றது.

ஆனால் தேனி பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, அதன் வேட்பாளர் கடந்த முறை தோல்வி அடைந்தார். இதனால் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் சவாலான பாராளுமன்ற தொகுதியான தேனியை திமுக எடுத்துக் கொள்வதாகவும், காங்கிரஸ் கட்சியில் தெரிவித்ததோடு, உங்களுக்கு எந்த தொகுதி வேண்டும் என கேட்டு காங்கிரஸ் கட்சிக்கு திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியை ஒதுக்கீடு செய்ததாக தங்க தமிழ் செல்வன் கூறினார்.

எனவே இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் தேனியை திமுக கைப்பற்ற கட்சியினர் உழைக்க வேண்டும் எனவும் பேசினார்.

Tags

Next Story