திருச்சியில் FIG TREE சர்வதேச மழலையர் பள்ளி தொடக்க விழா

திருச்சியில் FIG TREE Early Learning Centre சர்வதேச மழலையர் பள்ளி மாநகராட்சி மேயர் அன்பழகன் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
திருச்சி தென்னூர் அண்ணா நகர் இரண்டாவது குறுக்கு தெருவில் FIG TREE Early Learning Centre என்னும் சர்வதேச மழலையர் பள்ளி தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் மாமன்ற உறுப்பினர் பைஸ் அகமது ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி பள்ளியை தொடங்கி வைத்தனர். இந்த பிரீமியம் கிண்டர் கார்டன் பள்ளியில் இரண்டரை வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆஃப்டர் ஸ்கூலிங் புரோகிராம், டியூசன் சென்டர், ஆக்டிவிட்டி சென்டர் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இந்த தொடக்க விழாவில் பள்ளியின் நிறுவனர் ஜோன் ஜெயசீலன் மற்றும் ஷாலோம் எண்டர்பிரைசஸ் ஆலோசகரும், தி ஹிந்து செய்தியாளருமான கிதியோன் ராஜ் உள்பட பெற்றோர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story