நாமக்கல்லில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் முன்னாள் அமைச்சர் தங்கமணி திறப்பு
நீர் மோர் பந்தல் திறப்பு
கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் தங்கமணி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் தர்பூசணி பழங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். கோடை வெப்பத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால், அதிமுகவினர் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அவர்களின் தாகத்தை தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு அறிவுறுத்திருந்தார்.
அதன்படி நாமக்கல் - நேதாஜி சிலை அருகில் மூன்று சிலைகள் உள்ள தந்தை பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் சிலை அருகே அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.பி.பி.பாஸ்கர் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அதிமுக அமைச்சரும், குமாரபாளையம் எம்.எல்.ஏவுமான தங்கமணி கலந்துகொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், குளிர்பானம், தர்பூசணி பழங்களை வழங்கினார்.முன்னதாக அங்கிருந்த தந்தை பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகிய சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் மயில் சுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் சேகர், கோபிநாத், ராஜா என்கிற செல்வகுமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முரளி பாலுசாமி , மாவட்ட ஊராட்சியின் முன்னாள் தலைவர் காந்தி முருகேசன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் குப்புசாமி மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.